BREAKING
தங்க அடகு மற்றும் வாகனக் கடன்களில் பாரிய உயர்வு - மத்திய வங்கி தகவல் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் விற்பனை செய்யப்படாது - அமைச்சர் உபாலி பன்னில உறுதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - அரசிடம் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு நாடு கடத்தல் உத்தரவு மனைவியை கத்தியால் கொலை செய்த கணவன் விஷம் குடித்து தற்கொலை - குடும்பத் தகராறால் நேர்ந்த சோகம் தங்க அடகு மற்றும் வாகனக் கடன்களில் பாரிய உயர்வு - மத்திய வங்கி தகவல் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் விற்பனை செய்யப்படாது - அமைச்சர் உபாலி பன்னில உறுதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - அரசிடம் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு நாடு கடத்தல் உத்தரவு மனைவியை கத்தியால் கொலை செய்த கணவன் விஷம் குடித்து தற்கொலை - குடும்பத் தகராறால் நேர்ந்த சோகம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கி புறப்பட்ட விமானத்தில் அவசரநிலை - மின்னல் தாக்கத்தால் மீண்டும் கொழும்பில் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கி புறப்பட்ட விமானத்தில் அவசரநிலை - மின்னல் தாக்கத்தால் மீண்டும் கொழும்பில் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL606 என்ற விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியதாகக் கூறப்படுவதுடன், அதன் காரணமாக விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணத்தின் போது பலத்த சத்தம் கேட்டதுடன், எஞ்சின்களில் ஒன்றிலிருந்து தீப்பிழம்புகள் வெளிப்பட்டதாக சில பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் விமானப் பணியாளர்கள் உடனடியாக நிலைமையை மதிப்பீடு செய்து, விமானம் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக பயணிகளுக்கு அறிவித்தனர். மேலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிட்னி நோக்கிய பயணத்தைத் தொடர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மின்னல் தாக்கத்தால் விமானத்தின் ஒரு எஞ்சின் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக விமானப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் பாதுகாப்பாக இயங்கியதன் காரணமாக எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் பதிவாகவில்லை.

மேலும், அதிகாலை 2.05 மணி வரை பயணிகள் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்படும் வரை உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த அவசர சூழ்நிலையை மிகுந்த தொழில்முறை திறனுடனும் அமைதியான அணுகுமுறையுடனும் கையாண்டு, விமானத்தில் பயணித்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பணியாளர்களுக்கு பயணிகள் மற்றும் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"