BREAKING
போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரிப்பு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தீர்வு கோரிக்கை - ஈழத்து கடற்றொழிலாளர்கள் உரிமை வலியுறுத்தல் இலங்கையில் புதிய வரித் திருத்தங்கள் அமல் - பல பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயம் இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளாக அறிவிப்பு - சுகாதார எச்சரிக்கை போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரிப்பு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தீர்வு கோரிக்கை - ஈழத்து கடற்றொழிலாளர்கள் உரிமை வலியுறுத்தல் இலங்கையில் புதிய வரித் திருத்தங்கள் அமல் - பல பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயம் இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளாக அறிவிப்பு - சுகாதார எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - அரசிடம் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - அரசிடம் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் மற்றும் பின்னணியில் செயற்பட்டவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை தற்போதைய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை எதிர்க்கட்சி என்ற வகையில் தாங்கள் தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளில் தாக்குதலுடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் மற்றும் அதற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் தரப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான மற்றும் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சமூக ஒற்றுமைக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட முஜிபுர் ரஹ்மான், இந்த சம்பவத்தால் முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமன்றி தானும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், சுரேஷ் சலே உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளின் அடிப்படையில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கும் தங்களது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இன, மத அல்லது சமூக அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆதாரங்கள் காணப்படும் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதும், பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அரசின் முக்கிய பொறுப்பாகும் என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"