BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படலாம் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடல் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில், மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

கடற்பரப்புகளில் காற்று மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடும் என்றும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த நேரங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"