BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம்

யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம்

யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு சடலங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த இருவரும் 73வயதுடைய ஆண் மற்றும் 74 வயதுடைய பெண்  வயோதிபர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். ​

எனினும் அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற காலப்பகுதி தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"