கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (CI) வருணி போகஹவத்த, எதிர்வரும் 20 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தமை அதன் தவணை கட்டணத்தைச் செலுத்தியமைக்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலம் குறித்த விசாரணை தொடர்பில், இவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இன்று பிற்பகல் (06) மாத்தறை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய இந்த பெண் அதிகாரியிடமிருந்த ஆடம்பர உந்துருளி ஒன்றை CID அதிகாரிகளால் அண்மையில் கையகப்படுத்தப்பட்டது.
விசாரணைகளின்படி, மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவராலே இந்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைப் பணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தை வாங்குவதற்கும் குத்தகைத் தொகையைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிவதை மையமாகக் கொண்டு இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக