BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

நாட்டில் கடும் வெப்பம் மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்பம் மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ வெளியிட்டுள்ளார்.

அவரின் அறிவுறுத்தலின்படி, பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரடியாக சூரிய ஒளிக்கு உட்படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் எந்த வயதினருக்கும் தலைச்சுற்றல், தசை பிடிப்பு, வாந்தி, அதிக களைப்பு அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அனைவரும் அதிகளவில் தண்ணீர் பருகுவதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"