BREAKING
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Sun TV Serials Tamil TV Serials 3 hours ago Karthick Raja Karthick Raja in தொலைக்காட்சி Report Share விளம்பரம் சன் டிவி சன் டிவியின் சீரியல்களுக்கு எப் யாழ்ப்பாணத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என அர்ச்சுனா எம்.பி சர்ச்சைக்குரிய கருத்து – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் பேச்சு நீதித்துறையில் அரசியல் தலையீடு? ஜனாதிபதி மீது சஜித் பிரேமதாச கடும் குற்றச்சாட்டு கச்சத்தீவு விவகாரம்: விஜய்க்கு நாமல் ராஜபக்ச கடும் பதில் – “திருவிழாவுக்கு மட்டும் வாருங்கள்” என அழைப்பு கொழும்பு டொரிங்டனில் சொகுசு மாளிகை சர்ச்சை – மகிந்த குடும்பம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு விசாரணை தீவிரம் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Sun TV Serials Tamil TV Serials 3 hours ago Karthick Raja Karthick Raja in தொலைக்காட்சி Report Share விளம்பரம் சன் டிவி சன் டிவியின் சீரியல்களுக்கு எப் யாழ்ப்பாணத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என அர்ச்சுனா எம்.பி சர்ச்சைக்குரிய கருத்து – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் பேச்சு நீதித்துறையில் அரசியல் தலையீடு? ஜனாதிபதி மீது சஜித் பிரேமதாச கடும் குற்றச்சாட்டு கச்சத்தீவு விவகாரம்: விஜய்க்கு நாமல் ராஜபக்ச கடும் பதில் – “திருவிழாவுக்கு மட்டும் வாருங்கள்” என அழைப்பு கொழும்பு டொரிங்டனில் சொகுசு மாளிகை சர்ச்சை – மகிந்த குடும்பம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழு விசாரணை தீவிரம்

யாழ். பொது நூலக நிறுவுநர் கே.எம். செல்லப்பாவின் ஆவது ஜனன தினம் நினைவுகூரப்பட்டது

யாழ். பொது நூலக நிறுவுநர் கே.எம். செல்லப்பாவின் ஆவது ஜனன தினம் நினைவுகூரப்பட்டது

Jaffna Public Library நிறுவுநரான கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா (கே.எம். செல்லப்பா) அவர்களின் 130 ஆவது ஜனன தினம் இன்று (24) யாழ். பொது நூலகத்தில் நினைவுகூரப்பட்டது.

நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர், நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர் மற்றும் கே.எம். செல்லப்பாவின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புத்தூர் செல்லப்பா என அழைக்கப்பட்ட கே.எம். செல்லப்பா, 1933 ஆம் ஆண்டு புத்தூரில் தன்னிடமிருந்த நூல்களைக் கொண்டு சிறிய நூலகத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது நூலகம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டபோது, தன்னிடமிருந்த நூல்களையும், பலரிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,184 ரூபாய் 22 சதம் பணத்தையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, யாழ். வைத்தியசாலை அருகிலுள்ள வாடகை வீட்டில் 844 நூல்களும் 34 பருவ இதழ்களும் கொண்டு நூலகம் இயங்கத் தொடங்கியது. 1935 இல் யாழ். பட்டினசபை பொறுப்பேற்றதையடுத்து, நூலகம் வாடி வீட்டிற்கு மாற்றப்பட்டது.

பின்னர் 1953 ஆம் ஆண்டு தற்போதைய இடத்தில் திராவிடக் கலையம்சத்துடன் “அறிவுக்கோயில்” என்ற அடையாளத்துடன் நூலகக் கட்டிடம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில், இது ஆசியாவின் முக்கிய நூலகங்களில் ஒன்றாக உயர்ந்தது.

கே.எம். செல்லப்பா 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார். யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியதோடு, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் புலமை பெற்றவராகவும் திகழ்ந்தார். 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி அவர் மறைந்தார்.

அறிவைப் பரப்பும் பணியில் முக்கிய பங்காற்றிய அவரின் சேவையை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"