BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

மின்சாரக் கொள்கை இறுதி முன்மொழிவு மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு

மின்சாரக் கொள்கை இறுதி முன்மொழிவு மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு

நாட்டின் மின்சாரக் கொள்கை தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்பட்ட இறுதி முன்மொழிவு அறிக்கை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

நேற்று (17.02.2026) நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை அறிவித்தார்.

மின்சாரக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்துகளை முன்வைக்க 21 நாட்கள் முன்பே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த காலத்தில் பொதுமக்கள் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் கொள்கையில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இறுதி முன்மொழிவு அறிக்கை, மீண்டும் மக்கள் கருத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

மேலதிக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை 19.02.2026 வரை சமர்ப்பிக்க முடியும்.

அமைச்சர் குறிப்பிட்டபடி, இந்த நடவடிக்கை வலுசக்தித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மற்றும் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய கொள்கையை உருவாக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"