2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, இப்பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை உரிய நேர அட்டவணைகளுக்கு அமைய எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக