BREAKING
2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான் இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார் பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான் இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார் பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான்

சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான்

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இப்படி சொந்த ராசியில் சுக்கிரன் இருப்பதால் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

மேலும் இவர் தற்போது சித்திரை நட்சத்திரத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த சுக்கிரன் டிசம்பர் 05 ஆம் திகதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுமார் 17 நாட்கள் வரை இருப்பார். எனவே சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகிறது.

ரிஷபம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை தரப்போகிறது. தொழில் ரீதியாக, பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். உங்களின் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். காதல் உறவுகளில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

துலாம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடைபெறும். மேலும் செல்வமும் பெருகும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளுது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பபுள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"