BREAKING
விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா ஊழியர்கள்; பயணி உயிரிழப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று முதல் விசேட நிவாரணக் கொடுப்பனவு சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான Airbus வழக்கு ; பிரான்ஸ் தடயவியல் நிபுணர் இலங்கை வருகை விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா ஊழியர்கள்; பயணி உயிரிழப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று முதல் விசேட நிவாரணக் கொடுப்பனவு சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான Airbus வழக்கு ; பிரான்ஸ் தடயவியல் நிபுணர் இலங்கை வருகை

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று முதல் விசேட நிவாரணக் கொடுப்பனவு

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று முதல் விசேட நிவாரணக் கொடுப்பனவு

இதற்கமைய, மிக வறிய பிரிவைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு 20,500 ரூபாயும், வறிய பிரிவைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கப்பெறுகின்றது.

இந்த முறை அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெறும் மிக வறிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 381,369 ஆகவும், வறிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 635,761 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, நவம்பர் மாதத்தில் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவைப் பெறும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 1,017,130 ஆகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தைக் குறைத்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்பைத் தணிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த அவசர நிவாரணத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதற்காக 2.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விசேட அவசர நிவாரணக் கொடுப்பனவு இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"