எல்ல பொலிஸாரும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் இணைந்து நேற்று (24) எல்லை நகரை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
ஒரு மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் உள்ளிட்ட 21 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கான சாதகமான முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
கஞ்சா, ஐஸ், ஹெரோயின் மற்றும் மதனமோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடந்த 14 நாட்களுக்குள் பயன்படுத்தியவர்களே இவ்வாறு பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் இன்று (25) புதன்கிழமை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக