BREAKING
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள் பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

கோட்டபாயவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

கோட்டபாயவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று (25) குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 279 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, 2026 ஜூன் 3ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, அவர் வெளிநாடு சென்றால் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவாரா என்பதில் சந்தேகம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

எனினும், அவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் போதிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டால் பயணத் தடையை நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை எனவும் CID குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவர் வெளிநாடு சென்ற பின்னர் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என நீதவான் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய உத்தரவின் மூலம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை நீக்க கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"