BREAKING
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து மரண தண்டனையிலிருந்து விடுதலையான அனோஜன் ; நெகிழ்ச்சியில் தாய் தந்தை தெரிவித்த தகவல் மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர் முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழர் பகுதியில் இரவில் கோர விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து மரண தண்டனையிலிருந்து விடுதலையான அனோஜன் ; நெகிழ்ச்சியில் தாய் தந்தை தெரிவித்த தகவல் மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர் முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம்

மூடப்பட்ட அமெரிக்க வெள்ளை மாளிகை ; அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்

மூடப்பட்ட அமெரிக்க வெள்ளை மாளிகை ; அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகம் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 9-ஆம் திகதி வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியில் உள்ள லாபெயட் சதுக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று வழிகாட்டிப் பலகையின் மீது மோதியது.

காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயன்றதால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், மற்றொரு மர்ம நபர் லாபெயட் பூங்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள தடுப்பு வேலியை தாண்டி குதித்தார்.

அவரையும் அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக மடக்கி பிடித்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு பாதுகாப்பு மீறல்களும் அமெரிக்க அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவங்களின் போது அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் உள்ளேதான் இருந்தார். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மாளிகையை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்றும், இது அதிபர் டிரம்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சதித்திட்டமா என்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"