ஹோமாகம – கொடகம பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
திருமண மண்டபத்திற்குள் ஆரம்பித்த வாய்த்தர்க்கம், பின்னர் மண்டபத்திற்கு வெளியே மோதலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 34 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக