BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி

மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி

பிரித்தானியாவைச் சேர்ந்த சதுரங்க மேதை சிறுமி ஒருவர், பெண்கள் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தை வென்ற வரலாற்றிலேயே மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 வடமேற்கு லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான 11 வயதுடைய போதனா சிவானந்தன் என்பவரே மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றவர் ஆவார்.

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 46அவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தனது மூன்றாவது மற்றும் இறுதி பெண்கள் கிராண்ட் மாஸ்டர் (WGM) தகுதியைப் பெற்றார்.

இது ஒரு சான்றளிக்கப்பட்ட பட்டத்துக்குரிய நிலை செயல்திறனாகும் என சர்வதேச சதுரங்க சம்மேளனம் (FIDE) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சாதனையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக சர்வதேச சதுரங்க சம்மேளனத்திடம் தெரிவித்த போதனா சிவானந்தன், 'தொடர்ந்து வரலாறு படைக்க' விரும்புவதாகவும் கூறினார்.

ஏற்கனவே, பிரித்தானியாவின் மிக இளவயது மகளிர் சதுரங்க சம்பியனாகவும், எந்தவொரு விளையாட்டிலும் சர்வதேச அளவில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிக இளவயது நபராகவும் ஆகியுள்ள இந்தப் பாடசாலை மாணவியின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் இது சமீபத்திய மைல்கல் ஆகும்.

ஹரோவைச் சேர்ந்த போதனா சிவானந்தன், இங்கிலாந்தின் முதன்மை வீரருக்கு ஒதுக்கப்பட்ட இடமான முதலாவது சதுரங்க பலகையில் அனைத்து 11 சுற்றுகளிலும் விளையாடி, எட்டு புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தார்.

WGM பட்டத்திற்குத் தேவையான 2300 மதிப்பீட்டு வரம்பை, தனது மூன்றாவது மற்றும் இறுதி தகுதியைப் பெறுவதற்கு முன்பே அவர் கடந்திருந்தார்.

வரலாறு படைப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை FIDE பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், 'இதைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால், இத்தோடு நின்றுவிடாமல், தொடர்ந்து முன்னேறி வரலாறு படைக்கவும் விரும்புகிறேன்' என்றார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"