BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள்

அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலை தொடர்பாகவும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"