BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்பில் ருமேஷ் தரங்க தங்கம் வென்று சாதனை

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்பில் ருமேஷ் தரங்க தங்கம் வென்று சாதனை

உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இன்று (13) நடைபெற்றது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது.

உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.

அவர் இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையை நிலை நாட்டியிருந்தார்.

சமீபத்தில் 'டைமண்ட் லீக்' ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார்.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் ஜூலியன் வெபர் 85.89 மீட்டர் தூரம் எறிந்திருந்து மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருந்தார்.

இவர்களைத் தவிர, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 81.49 மீட்டர் தூரம் எறிந்திருந்தார்.

உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் போன்ற தொடர்களில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் இத்தொடர் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியதுடன், இன்று இறுதிப்போட்டி இடம்பெற்றிருந்தது.

இத்தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.

மேலும், 2 ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், 8 ஆம் இடம் பெறும் வீரருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைக்கவுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"