BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

உடற்பயிற்சியின் போது மார்பு வலியா? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

உடற்பயிற்சியின் போது மார்பு வலியா? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

உடற்பயிற்சி செய்யும்போது சிலருக்கு அதிக களைப்பு, மூச்சுத் திணறல் அல்லது மார்பில் இறுக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். குறிப்பாக ஜிம்மிற்கு புதிதாகச் செல்பவர்கள் அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்குபவர்கள் இதுபோன்ற அறிகுறிகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

சரியான Warm-up இல்லாமல் கடினமான பயிற்சிகளை மேற்கொள்வது, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, போதிய தூக்கமின்மை, மனஅழுத்தம், உடற்தகுதி குறைபாடு அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை சாதாரண காரணங்களாக இருக்கலாம்.

ஆனால், உடற்பயிற்சியின் போது ஏற்படும் ஒவ்வொரு மார்பு வலியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சில சந்தர்ப்பங்களில் அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

கடுமையான மார்பு வலி அல்லது அழுத்தம், மூச்சுத்திணறல், திடீர் தலைச்சுற்றல், குமட்டல், அதிகப்படியான வியர்வை போன்ற அறிகுறிகளுடன் மார்பு வலி ஏற்பட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வலி இடது கை, இரு கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகு பகுதிகளுக்கு பரவினால் அது அவசர மருத்துவ கவனம் தேவைப்படும் அறிகுறியாக இருக்கலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் உடற்பயிற்சியின் போது ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்தி மருத்துவ உதவியை நாடுவது அவசியம். வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.

உடற்பயிற்சியின் போது ஏற்படும் மார்பு வலிக்கு என்ன காரணங்கள், எந்த அறிகுறிகள் சாதாரணமானவை, எவை ஆபத்தானவை, எந்தச் சூழ்நிலையில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"