BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் வெள்ள அபாய நிலை நீங்கியது; ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு

நாட்டில் வெள்ள அபாய நிலை நீங்கியது; ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு

நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், தற்போது எந்தவொரு பகுதியிலும் வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இன்று காலை இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், அங்கு சுமார் 20 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், அதன் அளவு குறைவாகவே காணப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால் நாட்டின் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி எந்தவொரு பகுதியிலும் வெள்ள அபாயம் ஏற்படவில்லை என்றும் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"