BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம்

சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம்

கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் இரண்டுமே அதிகளவிலான புரதம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்களை கொண்ட சத்தான உணவுகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் ஊட்டச்சத்து அளவுகளில் காணப்படும் சில வேறுபாடுகள் காரணமாக, எந்த வகை ஈரலை எவ்வளவு அளவில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

100 கிராம் சிக்கன் ஈரல் மற்றும் ஆட்டு ஈரலில் சுமார் 160 முதல் 170 கலோரிகள், 20 முதல் 25 கிராம் புரதம் மற்றும் சுமார் 5 கிராம் கொழுப்பு காணப்படுகின்றன. அதேபோல், இரண்டிலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால், அளவோடு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஊட்டச்சத்து அடிப்படையில், ஆட்டு ஈரலில் வைட்டமின் பி12 அதிகமாக காணப்படுவதுடன், சிக்கன் ஈரலில் வைட்டமின் ஏ சத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. உடலுக்கு வைட்டமின் ஏ அவசியமான ஊட்டச்சத்தாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரல் பாதிப்பு, தலைவலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, சிக்கன் ஈரலை அதிகளவில் அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆட்டு ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் இரண்டையும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, ஆரோக்கியமான பெரியவர்கள் வாரத்திற்கு 100 முதல் 200 கிராம் வரை மட்டுமே ஈரலை உட்கொள்வது பொருத்தமானதாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு சுமார் 50 கிராம் போதுமானதாகும். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் ஈரல் உணவுகளை மிகக் குறைந்த அளவில் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது பாதுகாப்பானது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"