BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திறைசேரி அதிகாரியின் மரணத்திற்கு இதுவே காரணம்; நீதிமன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்

திறைசேரி அதிகாரியின் மரணத்திற்கு இதுவே காரணம்; நீதிமன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய அதிகாரி ரங்க நிஷாந்தவின் மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட விசேட சட்ட மருத்துவக் குழுவின் ஆய்வின் படி, அவர் உடலில் காணப்பட்ட காயங்கள் தானாக ஏற்படுத்திக் கொண்ட வெட்டுக்காயங்களாக இருக்கலாம் என நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது, விசேட சட்ட வைத்திய அதிகாரி இலங்கரத்ன பண்டா உள்ளிட்ட அதிகாரிகள் சாட்சியம் வழங்கினர். அதிகளவிலான இரத்தப்போக்கு மற்றும் அதனால் ஏற்பட்ட உடல் அதிர்ச்சி காரணமாகவே மரணம் நிகழ்ந்ததாக மருத்துவக் குழு ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், உடலில் காணப்பட்ட காயங்கள், பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் ஆதாரப் பொருட்கள் நீதிமன்றத்தில் அடையாளம் காண்பிக்கப்பட்டதுடன், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்காக வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"