BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சகோதரி உயிரிழந்து நாட்களில் சகோதரனும் மரணம் குடும்பம் துயரத்தில்

சகோதரி உயிரிழந்து நாட்களில் சகோதரனும் மரணம் குடும்பம் துயரத்தில்

மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்தொன்று ஒரு குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே விபத்தில் பலத்த காயமடைந்த அவரது சகோதரர் 17 வயதுடைய சாமிக தேஷான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், 8 நாட்களுக்கு பிறகு (மே 11ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த இளைஞர் சமீபத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விபத்து நடந்த நாளில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 9ஆம் தர மாணவி சந்தலி என்பவரும் உயிரிழந்துள்ளார். அவர், உயிரிழந்த இளைஞரின் உறவினராக இருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"