BREAKING
நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் 4 பில்லியன் நிதி மோசடி ; இரு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் 4 பில்லியன் நிதி மோசடி ; இரு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் கைது

கிளிநொச்சி - சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்?

கிளிநொச்சி - சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்?

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20.11.2026) நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் 16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட ஏழு இளைஞர்களால் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமன்றி, நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புங்குடுதீவு வித்தியா கூட்டுப் பாலியல் படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் சாந்தபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸார் அதற்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய சிறீதரன் எம்.பி., நியாயம் கோரிய மக்களின் போராட்டத்தைத் தடுத்ததன் நோக்கம் என்னவெனக் கேள்வி எழுப்பினார்.

கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஏழு பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்காகச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் வலியுறுத்தியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் சாந்தபுரம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு இராணுவத்தினரும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மறுப்புத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட சிறீதரன், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட அந்த மக்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகக் கூறினார்.

சாந்தபுரம் மக்களை மீள்குடியேற்றுவதற்குத் தினக்குரல் பத்திரிகையும் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, யாழ். தினக்குரல் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் வினோஜித், முன்னர் அப்பத்திரிகையின் முழுநேர ஊடகவியலாளராகப் பணியாற்றிய காலத்தில், மக்கள் தற்காலிகமாக வசித்த இடங்களுக்குச் சென்று அவர்களின் அவல நிலையைச் செய்திகளாக வெளியிட்டதாகவும், அதன் பின்னரே மக்கள் சாந்தபுரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகப் பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மத்தியில் அந்த மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு இன்றும் காணப்படுவதாகவும் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.

போருடனும் அதன் வடுக்களுடனும் வாழ்ந்துவரும் சாந்தபுரம் மக்கள், தற்போது திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும், பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"