தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மஹரகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டிய, தெபானம, பொல்வத்த சந்தி, பொரளை வீதியில் அமைந்துள்ள பழைய இரும்பு கொள்வனவு நிலையத்தில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 9.05க்கு ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைக் கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயணைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தினால் விற்பனை நிலையத்திற்கும் அங்கிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக