BREAKING
இன்றும் குறைந்த தங்கம் விலை; இரட்டிப்பு மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது இன்றும் குறைந்த தங்கம் விலை; இரட்டிப்பு மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்பி எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள் கேன்களுடன் முண்டியடித்த மக்கள் கூட்டம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது

பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல்

பொலிஸாரின் தடைகளை மீறி நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர்நாள் வாரம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்க பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர் தடைகளை மீறியும் கொட்டகை அமைக்கப்பட்டு , மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஐவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை, கொட்டகைகளை பொலிஸார் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் ஏற்பாட்டுக் குழுவினர், மீண்டும் அதே இடத்தில் கொட்டகை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"