BREAKING
தமிழர் பகுதி கடற்கரையில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிகாலையில் அம்பலமான விடயம் காலை உணவை உண்ட மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்; 36 பேர் மருத்துவமனையில் தரமற்ற உணவு; நாடாளுமன்றில் மதிய உணவைத் தவிர்த்த ஊழியர்கள் ரஷ்யாவில் தலைமறைவான ஆபத்தான இலங்கையர் நாட்டிற்கு அதிகரிக்கும் விலைகள்; இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் உயர்வு! தமிழர் பகுதி கடற்கரையில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிகாலையில் அம்பலமான விடயம் காலை உணவை உண்ட மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்; 36 பேர் மருத்துவமனையில் தரமற்ற உணவு; நாடாளுமன்றில் மதிய உணவைத் தவிர்த்த ஊழியர்கள் ரஷ்யாவில் தலைமறைவான ஆபத்தான இலங்கையர் நாட்டிற்கு அதிகரிக்கும் விலைகள்; இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் உயர்வு!

ரஷ்யாவில் தலைமறைவான ஆபத்தான இலங்கையர் நாட்டிற்கு

ரஷ்யாவில் தலைமறைவான ஆபத்தான இலங்கையர் நாட்டிற்கு

ரஷ்யாவில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவருமான 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் சேபால ரத்நாயக்க அமில சம்பத் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 44 வயதுடைய மாத்தறை, ஊருபொக்க பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் 'அங்கொட லொக்கா' மற்றும் 'மாகந்துரே மதுஷ்' ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதுடன், கடந்த 2024.07.08 ஆம் திகதி இடம்பெற்ற 'கிளப் வசந்த' கொலையுடனும் தொடர்புடையவர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், கடந்த 2016.04.29 ஆம் திகதி முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை ஒன்றையும் இவர் மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர் கடந்த 2019.03.28 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் மாகந்துரே மதுஷின் பிறந்தநாள் விருந்துபசாரத்தின் போது கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டிருந்த போதிலும், கடந்த 2023.05.03 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், இவரைக் கைது செய்வதற்காக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களினால் சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 'ரொட்டும்ப அமில', இன்று காலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு சந்தேகநபரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"