மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய கல்லூரியைச் சேர்ந்த 36 மாணவர்கள், இன்று (20) வகுப்புகளில் இருந்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இன்று காலை 8.45 மணியளவில் பாடசாலையின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உணவு உட்கொண்ட சற்று நேரத்தில், வகுப்பறைகளில் இருந்த 36 மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சை பெற்ற மாணவர்களில் 30 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் , இரண்டு ஆண் மாணவர்கள் மற்றும் மூன்று பெண் மாணவர்கள் உட்பட ஐந்து பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக