BREAKING
மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர் கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள் திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல் கொழும்பு இறைவரித் திணைக்களத் தலைமையகத்தில் தீ விபத்து! மட்டக்களப்பு கொலை வழக்கு ; முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 08 பேருக்கு மரணதண்டனை மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர் கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள் திமுக ஸ்டாலினை தோற்கடித்த தவெக எம்.எல்.ஏ காலமானார்; ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ;முதலமைச்சர் விஜய் இரங்கல் கொழும்பு இறைவரித் திணைக்களத் தலைமையகத்தில் தீ விபத்து! மட்டக்களப்பு கொலை வழக்கு ; முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 08 பேருக்கு மரணதண்டனை

கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள்

கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள்

பஹாமாஸ் நாட்டுக் கொடியின் கீழ் பயணிக்கும் 'வேர்ல்ட் ஒடிஸி' (World Odyssey) என்ற பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

வேர்ல்ட் ஒடிஸி கப்பல் நவம்பர் 23 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேர்ல்ட் ஒடிஸி கப்பலில் 524 மாணவர்கள் -விரிவுரையாளர்கள் மற்றும் 181 பணியாற் குழாமும் வருகை தந்துள்ளனர்.

அமைச்சின் தகவலின்படி கப்பலில் வந்த மாணவர்கள் கண்டி மற்றும் தென் மாகாணத்திலுள்ள பிரபல சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள அதேவேளை மேலும் பல மாணவர் குழுக்கள் கொழும்பிலுள்ள பல இடங்களை பார்வையிடுகின்றனர்.

வேர்ல்ட் ஒடிஸி கப்பல் கடலில் பயணிக்கும் வேளையிலும் அதன் உள்ளேயே கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது இக்கப்பலின் சிறப்பம்சமாகும். பயணத்தின்போது விரிவுரையாளர்கள் வகுப்புகளை நடத்துவதுடன் மாணவர்கள் தமது கல்வித் தொடர்கின்றனர் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் குழுக்கள் விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வேர்ல்ட் ஒடிஸி பயணிகள் அனைவரும் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகவும் இதன் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"