நானுயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றின் கூரையிலிருந்து குளவிக்கூடு கலைந்ததில் அங்கிருந்த மாணவர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (18) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதில் 06 மாணவர்கள் குளவி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலை சுமார் 8.00 மணியளவில், பாடசாலையின் காலை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரெனப் புகுந்த குளவிகள் மாணவிகளைக் கொட்டியுள்ளன.
குளவி தாக்குதலுக்குள்ளானவர்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி முலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக