BREAKING
யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உலகில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் ; BBC, HSBC உள்ளிட்டவை பாதிப்பு யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உலகில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் ; BBC, HSBC உள்ளிட்டவை பாதிப்பு

கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம்

கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம்

மொனராகலை அம்பகஹபிட்டிய பகுதியில்15 வயதுடைய சிறுமியொருவர், தனது பத்தாவது வயது முதல் பல சந்தர்ப்பங்களில் மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 17ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

கொவிந்துபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹபிட்டிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார், வேறொரு நபருடன் தனியாக வசித்து வரும் நிலையில், சிறுமியின் இச்சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவ்வாறு வசித்து வந்த காலப்பகுதியில், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிறுமியின் தாய்மாமன் ஒருவர் அவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அதே காலகட்டத்தில், தாயாரின் காதலனும் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், இளைஞர் ஒருவனாலும் சிறுமி பாரதூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கிராமத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்த இச்சிறுமி குறித்து, கிராமத்தவர்கள் கண்டறிந்து கொவிந்துபுர பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போதே, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

தனது மகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்காது அவரைக் கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிறுமியின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"