BREAKING
வெள்ளம் என போலி காணொளி வெளியிட்டால் சட்ட நவடிக்கை; கடும் எச்சரிக்கை! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெள்ளம் என போலி காணொளி வெளியிட்டால் சட்ட நவடிக்கை; கடும் எச்சரிக்கை! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி!

இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி!

 ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் ஊடாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி குறைக்கப்பட்டு , வரி திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இதனால் குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என ஜனாதிபதி நேற்று(13) தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி(கருவாடு) மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி ஒரு கிலோகிராமுக்கு 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாசி(கருவாடு) மீதான வரி ஒரு கிலோகிராமுக்கு 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், அரைத்த மற்றும் அரைக்காத உலர்ந்த மிளகாய் மீதான வரி ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"