BREAKING
நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! யாழில் சொகுசு காருக்குள் இருவர் அரங்கேற்றிய சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! யாழில் சொகுசு காருக்குள் இருவர் அரங்கேற்றிய சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் சொகுசு காருக்குள் இருவர் அரங்கேற்றிய சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் சொகுசு காருக்குள் இருவர் அரங்கேற்றிய சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணத்தில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு , சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் , சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த "பென்ஸ்" ரக சொகுசு காரினை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது காரினுள் வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டள்ளன.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர்  வியாழக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை கார் மற்றும் காரினுள் மீட்கப்பட்ட பொருட்கள் என்பவற்றையும் பொலிஸார் சான்று பொருட்களாக மன்றில் பாரபப்டுத்திய நிலையில் அவற்றை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை குறித்த சொகுசு கார் இளவாலை பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவருடையது எனவும் , அவரால் நாளொன்றுக்கு 08 ஆயிரம் ரூபாய் வீதம் சந்தேகநபர்களுக்கு காரினை வாடகைக்கு வழங்கப்பட்டதாகவும் , தெரிவிக்கப்படுகிறது.

கார் தொடர்பிலும் காரின் உரிமையாளர் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"