BREAKING
இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!

திருமணத்தை மீறிய உறவால் குழந்தை பெற்ற தாய் ; சவுதியில் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

திருமணத்தை மீறிய உறவால் குழந்தை பெற்ற தாய் ; சவுதியில் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

சவுதி அரேபியாவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்து, குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவருக்கு 100 சவுக்கடி தண்டனை விதித்து ரியாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் வசித்து வரும் பணக்கார குடும்பம் ஒன்றிற்கு வீட்டு வேலை செய்வதற்காக, கென்யா நாட்டில் இருந்து 40 வயதான பெண் பணிப்பெண்ணாக வந்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், எகிப்து நாட்டை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது கர்ப்பமாகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், அந்த ஆண் நண்பர் தனது தாய் நாட்டிற்கு திரும்பியுள்ளார். சவுதியில் ஷரியா சட்டத்தின்படி திருமணத்திற்கு வெளியே உறவில் ஈடுபடுவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்ணை பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக கென்யாவிற்கு திரும்ப செல்லமுடியாமல் சவுதியில் வசித்து வந்த பெண்ணுக்கு, தற்போது 100 சவுக்கடி தண்டனை விதித்து ரியாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"