BREAKING
16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல்

யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய்

யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய்

யாழ். வலிகாம் பகுதியில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தாக்கி விட்டு முச்சக்கர வண்டியில் வீதியில் இறக்கி விட்டதாக மாணவனின் தாய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த மாணவனின் தாய் தெரிவிக்கையில், "தனது மகன் பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி சென்ற காரணத்தினால் ஆசிரியர் குப்பை அள்ளுமாறு தண்டனை வழங்கினார்.

தனது மகன் குப்பையை குணிந்து அள்ளும்போது அணிந்திருந்த சட்டை வெளியே வந்தபோது ஆசிரியர் சட்டையை உள்ளே விட தெரியாதா என கேட்டு முதுகில் குத்தினார்.

வைத்தியசாலையில் அனுமதி அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு ஆசிரியர் கடுமையாக பேசி அவரும் முதுகில் கையால் குத்தி விட்டு அதிபரிடம் அழைத்துச் சென்றார்கள்.

மேலும், அதிபர் நீ பாடசாலையில் படிப்பதற்கு தகுதி இல்லை எனக்கூறி அவரும் முதுகில் அடித்து விட்டு இரண்டு ஆசிரியர்களுடன் பாடசாலை நேரத்தில் மாணவனை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி எனது கடைக்கு அருகாமையில் இறக்கிவிட்டு சென்றனர்.

மகன் நடந்தவற்றை என்னிடம் கூறினார். முதுகு நோவதாக தெரிவித்த போது தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன். வைத்தியசாலையில் இருந்து திரும்பி வந்த மகன் பாடசாலை செல்லவில்லை. வீட்டில் தற்கொலைக்கும் முயற்சிப்பதாக தன்னுடைய இன்னொரு மகன் தொலைபேசி மூலம் எனக்குத் தெரியப்படுத்தினார்.

இது குறித்து மகனிடம் என்ன நடந்தது என கேட்டபோது பாடசாலையில் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள், நான் உயிரை மாய்க்கப் போகிறேன் என மகன் என்னிடம் கூறினார்” என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அப்பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு வினவிய போது மாணவனுக்கு தாங்கள் அடிக்கவில்லை எனவும் பாடசாலை முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"