BREAKING

வென்னப்புவ விபத்தில் வயது இளைஞர் மரணம்

வென்னப்புவ விபத்தில் வயது இளைஞர் மரணம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வென்னப்புவை – நைனாமடம் பிரதேசத்தில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

மோதிய வேகத்தில் வீதியில் வீசியெறியப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வென்னப்புவைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மதுரங்குளி – கிவுல ஜனபதயப் பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே அசங்க மதுஷங்க பண்டார (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கவனக்குறைவான மற்றும் அஜாக்கிரதையான செலுத்துகையே இந்த விபரீதத்திற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விபத்தைத் தொடர்ந்து, விபத்துடன் தொடர்புடைய பேருந்தைத் தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ள வென்னப்புவைப் பொலிஸார், ஹபரணை – திரப்பன்கடவலப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அதன் சாரதியையும் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவைப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"