BREAKING
மாத்தளை இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் திருட்டு கஸ்ஸப தேரருடன் இருந்தவர் போதை பொருள் பாவித்தமை உறுதி அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை! GovPay பெயரில் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தி; மக்களுக்கு எச்சரிக்கை நண்பர்களுடன் நீராட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு; சோகத்தில் உறவினர்கள் மாத்தளை இரு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் திருட்டு கஸ்ஸப தேரருடன் இருந்தவர் போதை பொருள் பாவித்தமை உறுதி அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை! GovPay பெயரில் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்தி; மக்களுக்கு எச்சரிக்கை நண்பர்களுடன் நீராட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு; சோகத்தில் உறவினர்கள்

கஸ்ஸப தேரருடன் இருந்தவர் போதை பொருள் பாவித்தமை உறுதி

கஸ்ஸப தேரருடன் இருந்தவர் போதை பொருள் பாவித்தமை உறுதி

 அநுராதபுர புனித பூமியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இருந்த ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தி இருந்தமை ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இருந்தபோது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவரே ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிறி அல்லது 'தஹம் பிரசாத்'என்பவராவார்.

கடந்த நாட்களில் அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய விகாரைக்கு அருகில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கிடையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பாக இரு பொது மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அநுராதபுரம் புனித நகர திட்டமிடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களையும், ஆதரவு தெரிவித்த பொது மக்களையும் அங்கிருந்து அகற்ற பொலிஸார் முயற்சித்த போது அது மோதலாக வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"