BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

பதுளை - கொழும்பு வீதியில் கவிழ்ந்தது எரிபொருள் தாங்கி ஊர்தி: வழிந்தோடிய எண்ணெயைச் சேகரிக்க முண்டியடித்த மக்கள்!

பதுளை - கொழும்பு வீதியில் கவிழ்ந்தது எரிபொருள் தாங்கி ஊர்தி: வழிந்தோடிய எண்ணெயைச் சேகரிக்க முண்டியடித்த மக்கள்!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தி (Fuel Tanker) ஒன்று, நேற்று பிற்பகல் புவகஹவெல பகுதியில் திடீரென இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகிக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான இந்த ஊர்தியில் சுமார் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊர்தி கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்த பெருமளவிலான எரிபொருள் வீதியெங்கும் ஆறாக ஓடியது.


இதனைத் அவதானித்த அப்பகுதி மக்கள், கொள்கலன்கள் மற்றும் வாளிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீதியில் வழிந்தோடிய எரிபொருளைப் போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்கத் தொடங்கினர். நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் சூழலில், மக்கள் இவ்வாறு முண்டியடித்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்த பகுதியில் தீப்பரவல் ஏதேனும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவியதால், பொலிஸார் உடனடியாகத் தலையிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன், தீயணைப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"