BREAKING
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி , கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்!

தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி , கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்!

தகவல் அறியும் சட்டத்தில் முன்னாள் காதலி தொடர்பில் இளைஞர் ஒருவர், 1,886 கேள்விகள் கேட்ட சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழகம் விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில் அங்​குள்ள கல்​லூரி​யில் படித்​த​போது, உடன் படித்த பெண்ணை காதலித்​த​தாக கூறப்​படு​கிறது.

சந்​தோஷின் நடத்தை காரண​மாக அந்த பெண் அவரிட​மிருந்து விலகி சென்​ற நிலையில், , செல்​போன், கடிதம் மூலம் சந்​தோஷ் தொந்​தரவு செய்து வந்​ததால், அந்த பெண் தற்​கொலைக்கு முயற்​சித்​துள்​ள​தாகவும் தெரி​கிறது.

இந்​நிலை​யில், தன்​னுடைய முன்​னாள் காதலி தற்​போது யாரை காதலிக்​கிறார்? இதற்கு முன் எத்​தனை பேரை காதலித்​துள்​ளார்? அவருக்கு திரு​மணம் ஆகி​விட்​டதா? அவர் உயிரோடு இருக்​கிறாரா? என்​பன உள்​ளிட்ட 1,886 கேள்​வி​களை எழுப்பி கடலூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் உள்ள, பொது தகவல் அதி​காரிக்கு தகவல் அறியும் உரிமை சட்​டத்​தின் கீழ் 97 விண்​ணப்​பங்​களை சந்​தோஷ் அனுப்​பியுள்​ளார்.

இந்த தகவல்​களை வழங்​க​வில்லை என கடலூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாள​ருக்கு எதிராக சந்​தோஷ், மாநில தகவல் ஆணை​யத்​தில் மேல்​முறையீடு செய்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த ஆணை​யர் வி.பி.ஆர்.இளம்​பரிதி, “தகவல் அறியும் உரிமை சட்​டத்​தின் நோக்​கத்தை சிதைக்​கும் வித​மாகவும், அரசு ஊழியர்​களுக்கு தேவையற்ற பணிச்​சுமையை ஏற்​படுத்​தக்​கூடும் வகை​யிலும், எந்​த பொதுநலனும் இல்​லாமல் மனுதா​ரர் செயல்​பட்​டுள்​ளார்.

ஊழல்​களை​யும், முறைகேடுகளை​யும் வெளிக்​கொண்டு வரு​வதற்​காக உரு​வாக்​கப்​பட்ட சட்​டத்தை, தனது தனிப்​பட்ட காதலில் ஏற்​பட்ட விரக்​திக்​காக தவறாக பயன்​படுத்​தி​யிருப்​பது வன்​மையாக கண்​டிக்​கத்​தக்​கது.

இதுபோன்று முறையற்ற மனுக்​களை தாக்​கல் செய்து அரசுக்கு இடையூறு ஏற்​படுத்​தினால், அவர் ஆர்​டிஐயில் மனு தாக்​கல் செய்ய ஓராண்டு காலம் தடை விதிக்​கப்​படும் என்று எச்​சரித்து, சந்​தோஷுக்கு மனநல ஆலோ​சனை வழங்க மாவட்ட சுகாதா​ரத்​துறைக்கு உத்​தர​விட்​டதாக கூறப்படுகின்றது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"