BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ். இந்துவின் வைரமணி உதிர்ந்தது: கணிதப் பிரிவில் பெற்று சாதித்த மாணவன் அக்சயன் காலமானார்

யாழ். இந்துவின் வைரமணி உதிர்ந்தது: கணிதப் பிரிவில் பெற்று சாதித்த மாணவன் அக்சயன் காலமானார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மற்றுமொரு கல்விச் சாதனையாளரான லவன் அக்சயன் என்ற மாணவனின் மறைவு, யாழ். கல்விச் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், அண்மையில் வெளியான 2025-ஆம் ஆண்டுக்கான (2026-இல் நடைபெற்ற) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி, மூன்று பாடங்களிலும் 'A' (3A) அதி உயர் சித்திகளைப் பெற்றிருந்தார். இதன் மூலம் யாழ். மாவட்ட ரீதியில் 24-வது இடத்தைப் பிடித்து, பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றிருந்தார்.


வெற்றிச் செய்தியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று (04.04.2026) உயிரிழந்துள்ளார். சாதனை மாணவனின் இந்த அகால மரணம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இணுவில் பிரதேச மக்கள் என அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருந்த இளம் திறமையாளரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"