BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வருவதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த புயல் இன்று (26) காலை 5.30 மணியளவில் வட அட்சரேகை 15.4° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.9° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் நிலைகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தீவிர புயலாகவும், நாளை (27) மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். மேலும், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், வட அட்சரேகை 10° முதல் 20° வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80° முதல் 95° வரையிலும் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்குள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், மீனவர்களும் கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"