BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

கொழும்பில் ரூ. . கோடி பணத்துடன் பெண் கைது: போதைப்பொருள் கடத்தல் பணத்தை வங்கியில் பதுக்கிய அதிர்ச்சி!

கொழும்பில் ரூ. . கோடி பணத்துடன் பெண் கைது: போதைப்பொருள் கடத்தல் பணத்தை வங்கியில் பதுக்கிய அதிர்ச்சி!

கொழும்பின் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகையான பணத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நிதி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து சிஐடியினர் முன்னெடுத்த விரிவான விசாரணைகளை அடுத்து இந்தப் பெண் சிக்கியுள்ளார். சந்தேகநபரான பெண்ணின் பெயரிலுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் மொத்தம் ரூபா 93,762,939 வைப்பிலிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.


அவரது முதலாவது வங்கிக் கணக்கில் 73,762,939.95 ரூபாயும், இரண்டாவது கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்பிலிடப்பட்டிருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுடன் இந்தப் பெண்ணுக்குள்ள தொடர்பு மற்றும் இந்தப் பணத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் (Money Laundering Act) தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை, விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"