BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

மட்டக்களப்பில் சோகம்: ஆலயத் திருவிழா முடிந்து திரும்பிய வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் சோகம்: ஆலயத் திருவிழா முடிந்து திரும்பிய வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம் 6-இல் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.


மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தில் பங்கேற்றுவிட்டு, தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"