BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை: கலைப்பிரிவில் ஜதுர்சிகா முதலிடம் - சித்தியுடன் சாதனை!

மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை: கலைப்பிரிவில் ஜதுர்சிகா முதலிடம் - சித்தியுடன் சாதனை!

மன்னார் மாவட்டத்தின் கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், முருங்கன் மத்திய மகா வித்தியாலய (National School) மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா, கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் கவனிக்கத்தக்க பெறுபேற்றைப் பெற்றுள்ளார். மூன்று பாடங்களிலும் 'A' (3A) அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ள இவர், மன்னார் மாவட்ட மட்டத்தில் கலைப்பிரிவில் முதலாம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.


இம்மாணவியின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டுதல் மற்றும் பெற்றோரின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவையே இந்தச் சிறப்பான வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன. மன்னார் போன்ற மாவட்டங்களிலிருந்து கலைத்துறையில் இவ்வாறான பெறுபேறுகள் கிடைப்பது எதிர்கால மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஜதுர்சிகாவின் இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையில் பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் மன்னார் மாவட்டக் கல்வி சமூகத்தினர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"