BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாய்க்கட்டி வந்த பொருள் வெடித்துச் சிதறியது: பல்லேவெலவில் சிறுவன் படுகாயம்!

நாய்க்கட்டி வந்த பொருள் வெடித்துச் சிதறியது: பல்லேவெலவில் சிறுவன் படுகாயம்!

பல்லேவெல – பந்துராகொட பகுதியில் உள்ள வீடொன்றில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், வெளியில் இருந்து பந்து போன்ற ஒரு பொருளைக் கவ்விக்கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை ஒரு விளையாட்டுப் பொருள் என நினைத்த சிறுவன், நாயிடமிருந்து அந்தப் பொருளைப் பெற்று விளையாடத் தொடங்கியுள்ளார்.


சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போதே அந்தப் பொருள் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிப்பில் காயமடைந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாய் கொண்டு வந்த அந்த மர்மப் பொருள் "ஹக்கபட்டாஸ்" (Hakka Patas) எனப்படும் காட்டுயானைகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் வெடிபொருளா அல்லது வேறு ஏதேனும் வெடிபொருளா என்பது குறித்து பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"