BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் விநியோகக் கட்டணம் % உயர்த்த கோரிக்கை

எரிபொருள் விநியோகக் கட்டணம் % உயர்த்த கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தால், விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, விநியோகக் கட்டணத்தை சுமார் 25% அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி தெரிவித்ததாவது, இந்த கோரிக்கை ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதை தொடர்பாக இன்று (26) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அவர் மேலும் விளக்குகையில், அண்மையில் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விநியோகச் செலவுகள் அதிகரித்து உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை 101 ரூபாயால் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் விநியோகம் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும், அதனால் அந்த விநியோகக் கட்டணத்தை 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25% அதிகரிக்க வேண்டும் என சங்க செயற்குழு ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் தங்களை சிரமத்தில் விடாது என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"