மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
“இப்போது அநுர எங்கே? அநுர காணாமல் போய் விட்டார்” என அசாத் சாலி தெரிவித்திருந்த நிலையில், அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளிப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த கருத்து தொடர்பில் சமூகச் செயற்பாட்டாளர் தாஹா ஐன்ஸ்டீன் கருத்து வெளியிட்டுள்ளார். அசாத் சாலி கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதேவேளை, அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் ஷிரான் பாசிக் தொடர்பிலும் தாஹா ஐன்ஸ்டீன் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எனினும், அசாத் சாலி கைது செய்யப்படுவாரா என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக