BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி: சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் இன்றைய நிலவரம்!

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி: சர்வதேச சந்தையிலும் இலங்கையிலும் இன்றைய நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவடைதல் காரணமாக தங்கத்தின் விலை இன்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


சர்வதேச சந்தையின் இந்தத் தாக்கத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கம் 340,400 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், ஒரு பவுண் 24 கரட் தங்கம் 370,000 ரூபாவாகக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது திடீரெனக் குறைந்துள்ளமை நகை வாங்குவோரிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"