BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

போர் நெருக்கடியால் டொலர் மதிப்பு ரூபாவை தாண்டும் அபாயம்

போர் நெருக்கடியால் டொலர் மதிப்பு ரூபாவை தாண்டும் அபாயம்

மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி 350 ரூபாவைத் தாண்டும் அபாயம் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது, மத்தியக் கிழக்கு பகுதியில் போர் நீடித்தால் உலகளவில் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும். அதன் தாக்கம் இலங்கையிலும் நேரடியாக உணரப்படும். இதன் விளைவாக அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் உயர்ந்து, நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும்.

இதனால் பொதுமக்கள் தினசரி வாழ்க்கையில் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், அரசாங்கம் வெளியிட்டு வரும் பொருளாதாரத் தரவுகள் குறித்து மக்களிடையே சந்தேக நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1988 முதல் 1993 வரை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச நெருக்கடிகளை திறம்பட கையாண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றினார் எனவும் அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"