BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தையில் கட்டிடத்தில் இருந்து விழுந்து தமிழ் இளைஞன் உயிரிழப்பு

வெள்ளவத்தையில் கட்டிடத்தில் இருந்து விழுந்து தமிழ் இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரெட்டிக்கா வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து விழுந்து 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் உடவலவே, ஒலிமட பகுதியைச் சேர்ந்த புவனேஷா ராசா ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

10 மாடி கட்டிடம்

நிர்மாணிப்பில் இருந்த 10 மாடி கட்டிடத்தின் 7வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது லிப்டில் இருந்து தவறி விழுந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த இளைஞனை அங்கு இருந்த தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"